அஜித்தை வைத்து அரசியல் லாபம்..? வாண்டடாக சிக்கிய வானதி சீனிவாசன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2021, 5:25 PM IST
Highlights

’’நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’’என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்டுக்கு ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார்.

’’நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’’என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்டுக்கு ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார்.

சமீப காலங்களில் தல அஜித்தின் ரசிகர்கள் பார்ப்பவர்களையெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். வலிமை படக்குழு படத்தின் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் போது, அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரரிடம் கேட்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் அல்லது விளையாட்டு வீரர்களிடம் தனது படத்தின் அப்டேட் குறித்து கேட்க வேண்டாம் என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை ஒரு செய்தி வெளியீட்டின் மூலம் கேட்டுக்கொண்டார்.

எனினும், தற்போது  ஒரு ரசிகர் பாஜக தலைவர் வானதி சீனிவாசனிடம் வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டுள்ளார். பாஜக-வின் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இதே தொகுதியில் இருந்துதான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் வானதி சீனிவாசன் கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசன் அளித்த இந்த கிண்டலான பதில் ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.

நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. https://t.co/eFPMday87G

— Vanathi Srinivasan (@VanathiBJP)

 

அதற்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர், அப்போ வலிமை அப்டேட் கிடைக்காதா அக்கா? என கலாய்த்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்கும் முற்றிலும் ஒத்துவராத வகையிலும், சாத்தியமற்றவையாகவும் உள்ளன.

click me!