வாரிசு அரசியல் என மக்கள் நினைத்தால் என்னை நிராகரிக்கட்டும்.. கருணாநிதியைப் போலவே தில்லு காட்டும் உதயநிதி.

Published : Mar 15, 2021, 05:22 PM IST
வாரிசு அரசியல் என மக்கள் நினைத்தால் என்னை நிராகரிக்கட்டும்.. கருணாநிதியைப் போலவே தில்லு காட்டும் உதயநிதி.

சுருக்கம்

வாரிசு அரசியல் என மக்கள் நினைத்தால் என்னை நிராகரிக்கட்டும் என்றார்.  திமுக கட்டப்பஞ்சாயத்து செய்யும், நில அபகரிப்பு செய்யும் என அதிமுக பிரச்சாரம் செய்வது குறித்த  கேள்விக்கு பதிலளித்த அவர்,    

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் பின்  செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், திமுகவில் குடும்ப அரசியல் உள்ளதா இல்லையா என மக்கள் முடிவு செய்யட்டும் என்றார்.  வாரிசு அரசியல் என மக்கள் நினைத்தால் என்னை நிராகரிக்கட்டும் என்றார். 

திமுக கட்டப்பஞ்சாயத்து செய்யும், நில அபகரிப்பு செய்யும் என அதிமுக பிரச்சாரம் செய்வது குறித்த  கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்றார். திமுக ஆரம்பத்தில் இருந்து சி.ஏ.ஏவை எதிர்த்தது இதில் முதலில் கைதானதும் நான்தான் என்ற அவர், சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் எனவும், சிறுபான்மையினர் அரண் யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார். 

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எம்.எல்.ஏ பதவி என்பது நியமனப்பதவி கிடையாது, மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பதவி என்றார். வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும்,  வன்முறையற்ற மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை திமுக கொடுக்கும் என உறுதிபட கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!