6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள்... திருமாவளவன் சூளுரை..!

Published : Mar 15, 2021, 05:04 PM IST
6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள்... திருமாவளவன் சூளுரை..!

சுருக்கம்

தேர்தல் யுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள், 6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.

தேர்தல் யுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள், 6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அரசியல் களத்தில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மயக்கி அதிமுக கூட்டணி ஏமாற்ற முயற்சிக்கிறது.

அதிமுக-வோடு கூட்டணி அமைத்து சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சாதி, மதவாத சனாதன சக்திகள் காலூன்ற முயற்சிக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல் மதசார்பின்மை - மதவாத சக்திகளுக்கு இடையிலான யுத்தம். இந்த யுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள், 6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள். அதிமுக-வினர் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், எந்தெந்த வகை ஆயுதம், அஸ்திரங்களை பயன்படுத்தினாலும் வீழ்வது உறுதி. திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆள்வது உறுதி’’என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!