#BREAKING 5 ஆண்டுகளில் ஓபிஎஸ் சம்பாதித்தது இத்தனை கோடியா?... பல நூறு மடங்கு உயர்ந்த சொத்துக்களின் மதிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 15, 2021, 05:50 PM IST
#BREAKING 5 ஆண்டுகளில் ஓபிஎஸ் சம்பாதித்தது இத்தனை கோடியா?... பல நூறு மடங்கு உயர்ந்த சொத்துக்களின் மதிப்பு...!

சுருக்கம்

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மூலமாக அவருடைய சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளான அன்றே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தன்னுடைய சொத்துக்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் படி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மூலமாக அவருடைய சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பின் படி,  அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 5 ஆண்டுகளில் 843% உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டு 55 லட்சம் ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 5.19 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் துணை முதல்வரின் அசையா சொத்துக்களின் மதிப்பும் 5 ஆண்டுகளில் 169% ஆக உயர்ந்துள்ளது. அதாவது 2016ம் ஆண்டு 98 லட்சம் ரூபாயாக இருந்த அசையா சொத்துக்களின் மதிப்பு நடப்பு ஆண்டில் ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!