பஞ்சமி நில விவகாரத்தில் பட்டாவும் இல்ல... பத்திரத்தையும் காட்டல... திமுக மீது துடைக்கப்படாத களங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 19, 2019, 4:52 PM IST
Highlights

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் புகார் கிளப்பியபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பட்டாவை கூட விசாரணை ஆணையத்தில் திமுக சமர்ப்பிக்கவில்லை. 

முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் திமுக தரப்பில் உரிய பட்டா- பத்திரத்தை காட்டவில்லை என மனுதாரரான பாஜக செயலாளர் சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

 

முரசொலி பஞ்சமி நிலமா? என்கிற விசாரணை இன்று  நடைபெற்றது.  இந்த விசாரணையில் அரசு தரப்பில் தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியும் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.  மனுதாரராக பாஜக நிர்வாகி சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

சாஸ்திரி பவனில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அலுவலகத்தில்  தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் ஆதாரங்களைக் காட்ட அவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாஸ்திரி பவனில் நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.  

இந்நிலையில் இந்த விசாரணை குறித்து பாஜக செயலாளர் சீனிவாசன், ‘’திமுக மூலப்பத்திரம் எதுவும் கொண்டுவரவில்லை. பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் புகார் கிளப்பியபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பட்டாவை கூட விசாரணை ஆணையத்தில் திமுக சமர்ப்பிக்கவில்லை. ஒரு வெள்ளைத் தாளில் எழுதி மட்டுமே கொடுத்துள்ளனர். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது ஆணையருக்கு மட்டுமே தெரியும். 

புகாருக்கு உள்ளானவர்கள் குற்றச்சாட்டு கூறும்போது அதை நிரூபித்தே ஆக வேண்டும். ஆனால், திமுக இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. எங்களிடம் இருந்த ஆவணங்களை கொடுத்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்களை கேட்டிருக்கிறோம். தமிழக அரசிடம் இது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டிருக்கிறோம் ’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!