ஒரே ஒரு தொகுதி.!தாமரை சின்னத்தில் தான் போட்டி.!உறுதியாக நிற்கும் பாஜக.?கெத்து காட்ட முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Mar 21, 2024, 8:11 AM IST

நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்படும் என பாஜக தரப்பு கூறிவருவதால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 


தேர்தல் பணி தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடைபெறவுள்ள ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டது.

Tap to resize

Latest Videos

வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்து விட்டது. இதனையடுத்து நாளை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதே போல அதிமுக சார்பாகவும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு

இந்த சூழ்நிலையில், பாஜகவும் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், பாமகவிற்கு 10 தொகுதியை ஒதுக்கியுள்ளது. அடுத்ததாக அமமுகவிற்கு 2 தொகுதிகளையும், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன் ஆகியோருக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அந்த கட்சி 3 தொகுதி வேண்டும் என விடாப்பிடியாக உள்ளது. ஆனால் பாஜகவோ இரண்டு தொகுதி மட்டுமே தர முடியும் என தெரிவித்து விட்டது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

குழப்பத்தில் ஓபிஎஸ்

இதனையடுத்து ஓபிஎஸ் அணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் தரப்பில் இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மற்றும் தேனி தொகுதி ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு தொகுதியும் டிடிவி மற்றும் ஜி.கே.வாசன் கட்சிக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அதுவும் பாஜக சின்னமான தாமரையில் தான் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளது.

இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி முடிவு ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இன்று ஓபிஎஸ் அணி தனது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடலாமா.? அல்லது பாஜகவிற்கு ஆதரவு மட்டும் தெரிவித்து விட்டு அமைதியாக இருக்கலாமா என ஆலோசனை நடத்தவுள்ளது. 

இதையும் படியுங்கள்

6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?

click me!