
அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் என் மீதும் தேசதுரோக வழக்கு பாயலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பினர், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஸ்டாலினிடம் கேட்டபோது, அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் என்மீதும் தேசதுரோக வழக்கு பாயலாம் என்று கூறினார்.
நீலகிரியில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டம், குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் பேசும்போது, ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகர் உள்ளது என்றார்.
அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் என்மீதும் தேசதுரோக வழக்கு பாயலாம் என்றும் கூறினார். அப்படி என்மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் ஆனால் டெங்குவை கட்டுப்படுத்தாமல் அரசு மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் விவகாரத்தில், மத்திய அரசு தனது மதவாதத்தை வெளிபிபடுத்துகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.