
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற்ம உத்தரவிட்டும் இதுவரை அறிவிப்பு வெளியிடாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கேட்டு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க தவறியதாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆலுந்தூர் பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நவம்பர் மாதம் 17 ஆம் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று ஆலந்தூர் பாரதி அதில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.