ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட சோகம்... தவிக்கும் பக்தர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jul 21, 2020, 10:26 AM IST
Highlights

திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட  தலைமை அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5 ம்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

click me!