அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..! நவ.12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

By Ajmal KhanFirst Published Nov 8, 2022, 2:55 PM IST
Highlights

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வருகிற 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.எனவே இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று மாண்பமை உச்சநீதிமன்றம் 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூக நீதியையே நீர்த்து போக செய்கிற நடவடிக்கை.. தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுங்க.. வைகோ.!

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே முடிவு எடுப்பதற்கு ஏதுவாக வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது.

இளைஞர்களின் கனவில் மண்ணை போடும் திமுக.! மவுன சாமியாராக இல்லாமல் நடவடிக்கை எடுத்திடுக- ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்

சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு கடிதம்

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

10% இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு..! அனைத்து கட்சி கூட்டம் கூட்ட தமிழக அரசு முடிவு.?
 

click me!