10% இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு..! அனைத்து கட்சி கூட்டம் கூட்ட தமிழக அரசு முடிவு.?

By Ajmal KhanFirst Published Nov 8, 2022, 2:07 PM IST
Highlights

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீடு- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்திற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்ட நிபுணர்கள் மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்டார். ஏற்கனவே மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 103 திருத்தம் செய்து அதன் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றிய நிலையில் தமிழக அரசு இந்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து தற்போது வரை இதனை செயல்படுத்தாமல் உள்ளது.  மேலும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவும் உச்ச நீதிமன்றத்தில் சட்ட திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் பின்தங்கியவர்களா..? 10% இட ஒதுக்கீடு மோசடித்தனமாகும்- சீமான் ஆவேசம்

இந்த நிலையில் முன்னேறிய சமுதாயத்தினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள காரணத்தால் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என நேற்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களோடும்  ஆலோசனை மேற்கொண்டார். இதில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்றும் அதற்கு முன்னதாக இது குறித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு..! ராமதாஸ் அறிக்கை
 

click me!