மத்திய அரசுக்கு உதவியாகத்தான் தமிழக அரசு குழு சென்றுள்ளது.. அண்ணாமலையை திருப்பி அடித்த மா.சு.

Published : Mar 05, 2022, 11:41 AM ISTUpdated : Mar 05, 2022, 11:44 AM IST
மத்திய அரசுக்கு உதவியாகத்தான் தமிழக அரசு குழு சென்றுள்ளது.. அண்ணாமலையை திருப்பி அடித்த மா.சு.

சுருக்கம்

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம்  3,72,41,003 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10,00,30,346 -யாக உள்ளது. முதல் தவனை தடுப்பூசி 91.54% பேரும், 2ம் தவனை தடுப்பூசியை 72.62% பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்  71% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

சென்னை மேயரை அதிமுக ஆட்சி காலத்தில் "மாண்புமிகு" மேயர் என அழைக்க வேண்டும் என மாற்றப்பட்ட அரசாணையை "வணக்கத்திற்குறிய" மேயர் என மாற்றுவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் 23-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இன்று 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம்  3,72,41,003 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10,00,30,346 -யாக உள்ளது. முதல் தவனை தடுப்பூசி 91.54% பேரும், 2ம் தவனை தடுப்பூசியை 72.62% பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்  71% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 8,45,289 பேர் செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர்,  அதில் 6லட்சம் பேர் செலுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

மேயரை அழைக்கும் பொழுது, வணக்கத்திற்குரிய என்று அழைக்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினார்.  அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, மாண்புமிகு என அரசாணை வெளியிட்டார் என குற்றச்சாட்டிய அவர், மேயருக்கு பல சிறப்பு அதிகாரங்கள் உள்ளது என்றும் தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஜமேதார் என்ற பட்டம் ஆளுநர், முதல்வர், மேயர் ஆகியோரின் உதவியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் இனி மேயரை வணக்கத்திற்குறிய மேயர் என அழைக்க வேண்டும் என்ற அரசாணை குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என கூறினார். உக்ரைனில் இருந்து வந்த தமிழக மருத்துவ மாணவர்களுக்கு முடிந்த வரை தமிழக அரசு உதவி செய்யும். தமிழக அரசின் குழு உக்ரேன் சென்றிருப்பது அரசியல் ஆதாயத்திற்கு என்ற அண்ணாமலையின் கருத்திற்கு, ஒன்றிய அரசுக்கு உதவியாக தான் தமிழக அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை  கொண்ட குழுவை அனுப்பி உள்ளது என்றும் அண்ணாமலை பேசுவது தமிழக மக்கள் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!