எடப்பாடி போட்ட பிட்டு..! 8 வேண்டாம் 5 போதும்..! "மயங்கிய பியூஸ்"... ஓகே சொன்ன அமித்ஷா..! நடந்த தரமான சம்பவம் இதுதான்..!

By ezhil mozhiFirst Published Feb 20, 2019, 2:48 PM IST
Highlights

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க போராடி வருகின்றனர். அதன்படி, நேற்று பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டத்தை  தொடர்ந்து, பாஜக-அதிமுக கூட்டணியும் உறுதியானது.

எடப்பாடி போட்ட பிட்டு..! 8 வேண்டாம் 5 போதும்..!  

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க போராடி வருகின்றனர். அதன்படி, நேற்று பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து, பாஜக-அதிமுக கூட்டணியும் உறுதியானது.

அதிமுக வுடன் பாஜக கூட்டணி அமைத்து 8 தொகுதிகளையாவது பெற  வேண்டும் என தீவிரமாக இருந்தது. இது குறித்த நல்ல முடிவை அறிவிக்க நேற்று அமித்ஷா சென்னை வருவதாக இருந்தது. ஆனால் சில முக்கிய தகவல் கசியவே பியூஸ் கோயலே கூட்டணி பற்றி பேசி மேலிடத்திற்கு தெரியப்படுத்தும் நிலை ஏற்பட்டதால் அமித்ஷா வரவில்லை. 

இந்நிலையில், நேற்று காலை பாமக-அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை முடிவு பெற்று உடன் பாமக விற்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டது. 

அதன் பின், பாஜக உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை கிரவுன்  பிளாசா ஓட்டலில் நடைபெற்றது. இதற்காக மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் வருகை தந்தனர் 

இவர்கள் அனைவரையும், எஸ்பி.வேலுமணி மற்றும் தங்கமணி இணைந்து வரவேற்றனர்.பின்னர் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பேச்சு வார்த்தையைல் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருந்த பாஜக, 8  தொகுதிகளை கேட்டு இருந்தது. அதாவது, பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி இவர்களுடன் பாஜக நேரடி தொடர்பில் இருந்ததால் இவர்களுக்கும் சேர்த்தே தொகுதிகளை கேட்டு வைத்து,அவர்களை பாஜக சார்பில் போட்டியிட பக்காவா திட்டம் போட்டு இருந்தது பாஜக.

ஆனால், பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும், ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியிலும், கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியிலும், பாஜக சார்பில் போட்டியிட்டால் வெற்றி பெறுவதில் சிக்கல் உள்ளது என்பதை மிக தெளிவாக, புள்ளி விவரத்தோடு புட்டு புட்டு வைத்து உள்ளது அதிமுக.

அதுமட்டுமல்லாமல், எந்தெந்த தொகுதியில் யார் சார்பாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ளது என பக்காவா சர்வே எடுத்து பியூஸ் கண்முன்னே வைத்துள்ளது அதிமுக.

"40  உம் நமதே"

மேலும் முதல்வர் எடப்பாடியும், துணை முதலவர் பன்னீர் செல்வமும் இணைந்து சில முக்கிய கருத்துக்களை முன் வைத்து உள்ளனர். அதாவது  "40 உம் நமதே"...என வெற்றி கூட்டணியாக நினைத்து  கூட்டணியில் இது போன்று பக்கவா பிளான் பண்ணி, வேட்பாளரை  நிறுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவது உறுதி.. மேலும் பாஜக 5  தொகுதிகளில் மட்டுமே போட்டிபோயிட்டாலும், அவை அனைத்தும்  பாஜகவிற்கு வலுவான தொகுதி தான்... வெற்றி வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என பாயிண்டை புட்டு புட்டு வைத்து உள்ளது அதிமுக....அதனால் தான்  பியூஸ்கோயல் செய்தியாளர்களின் சந்திப்பின் பொது "40 உம் நமதே" என குறிப்பாக தமிழில் தெரிவித்து இருந்தார். 

இதனை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் எடப்பாடி முன்வைத்துள்ள கருத்துக்கள் மற்றும் புள்ளிவிவரம் சரியாகத்தான் இருக்கே என  யோசனையில் மூழ்கிய  பியூஸ், முதல்வர் போட்ட பிட்டுக்கு மயங்கி  அமித்ஷாவிற்கு ஒரு போன் கால் போட்டு உள்ளார். நடந்ததை விவரமாக அமித்ஷாவிடம் எடுத்துரைக்க, அவரும் கொஞ்சம் நேரம் யோசனை செய்து 5 தொகுதிக்கே ஓகே சொல்லி உள்ளார். 

தான் ஒன்னு  நினைச்சா ... தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்... இங்கு பாஜக ஒன்று நினைத்தால், எடப்பாடி ஒன்னு  நினைத்துள்ளார்..ஆக முதல்வர் போட்ட மாஸ்டர்  பிளான்  படி, 5 தொகுதிக்கு பாஜகவை தலை அசைக்க வைத்துள்ளார்.

இதற்கு பின்னனியில் இரண்டு மணிகளும் உள்ளனர் என விமர்சனம் எழுந்துள்ளது. எப்படியோ எடப்பாடி ஆட்சியில், அவர் கருத்தா கச்சிதமா காய் நகர்த்தி விட்டார் என்கிறது அரசியல் வட்டாரம். விதை விதைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் முடிவில் தான் தெரியும் அறுவடை எப்படி என்று...பொறுத்திருந்து பார்க்கலாம்..! 


 

click me!