
டிடிவி தினகரன் மீதான தேசத் துரோக வழக்கில் புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்று சேலம் மாவட்ட காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த பிரசுரங்களில் தினகரன் உள்ளிட்ட அம்மா அணி ஆதரவாளா்களின் பெயா் இடம் பெற்றிருந்ததாலும், இவற்றை டிடிவி தினகரன் தான் விநியோகம் செய்யச் சொன்னதால் தினகரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதாவது அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிட்டதாக தினகரன், புகழேந்தி உட்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் மீதான தேசத் துரோக வழக்கில் புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்று சேலம் மாவட்ட காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.