பெண்களை ஆபாசமாகவும், கொச்சைத்தனமாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல! கி. வீரமணி 

 
Published : Oct 26, 2017, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
பெண்களை ஆபாசமாகவும், கொச்சைத்தனமாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல! கி. வீரமணி 

சுருக்கம்

Women should not talk obscene

இது தொடர்பாக கி. வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்ப மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துக்களைச் சொல்லி வருகிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மேல் ஜாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால், இடத்துக்கேற்ப அவர் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் தமிழிசை சௌந்தரரராஜனை ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்ததல்ல என்றும் அதில் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில், பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.

டாக்டர் தமிழிசை அவர்களும், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!