நீங்கள் சொன்ன வதந்தி உங்கள் பெயரிலேயே உண்மையாகியுள்ளது. முதல்வர் பழனிச்சாமி v/s உதயநிதி ட்விட் கமெண்ட்

By T BalamurukanFirst Published Jun 16, 2020, 8:21 AM IST
Highlights

சென்னை உள்ளிட்ட 4மாவட்டங்களில் முழுஊரடங்கு பிறப்பித்துள்ளார் முதல்வர். இதை திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி நீங்கள் சொன்ன வதந்தி இன்று உங்கள் பெயரிலேயே உண்மையாகிவிட்டது என்று ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.


மீண்டும் முழுஊரடங்கு போடப்போகிறது தமிழக அரசு என்கிற செய்தி கடந்த ஒருவாரமாகவே காற்றில் பரவிக்கொண்டிருக்கிறது.அந்த செய்தி பொய்.இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் சென்னை உள்ளிட்ட 4மாவட்டங்களில் முழுஊரடங்கு பிறப்பித்துள்ளார் முதல்வர். இதை திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி நீங்கள் சொன்ன வதந்தி இன்று உங்கள் பெயரிலேயே உண்மையாகிவிட்டது என்று ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டரில், "எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியதை  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி ஒரு டுவிட் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் பதிவில் அவர்...


"3 நாட்களுக்கு முன்பு நீங்கள் சொன்ன வதந்தி, இன்று உங்களின் பெயரிலேயே உண்மையாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் வைரஸ் குறித்த அறிவியலை ஐந்து மாதங்களாகியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இந்த குளறுபடிகள் காட்டுகின்றன முதல்வர் அவர்களே. அதனால்தான் சொல்கிறோம்" என்றிருக்கிறார்.

click me!