கொரோனாவுக்கு கட்டம் கட்டிய சென்னை மாநகராட்சி ஆணையர்..!! அதிரடிமேல் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 10:27 PM IST
Highlights

அறிகுறி இல்லை என்றால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும், அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

பெருநகர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புநடவடிக்கையாக நாள்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக 15-6-2020 முதல் சென்னையில் உள்ள கோட்டங்களிலும், கோட்டத்துக்கு 2 மருத்துவ முகாம்கள் என அந்த கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நாள்தோறும் வெவ்வேறு இடங்களில் 400 மருத்துவ முகாம்கள் நடத்தவும், மாநகர ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் மூலம் 140 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 540 மருத்துவ முகாம்கள் கோட்ட நல அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், காலை 8 மணி முதல் 11:30 மணி வரை, புறநோயாளிகள் பிரிவிற்கு வருகின்றவர்களுக்கு, சிறு சிறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை, அனைத்து வகை காய்ச்சலுக்கான சிகிச்சை, கர்ப்பகால பரிசோதனைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், எச்ஐவி பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பார்த்தல், ஆன்லைன் மூலம் கர்ப்பம் பதிவு செய்தல், ஆர்.சி.எச் ஐடி நம்பர் வழங்குதல், கர்ப்பகால முன் சிகிச்சை மற்றும் கர்ப்பகால பின் சிகிச்சை அளித்தல், தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான (நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் மார்பக புற்றுநோய்) சிகிச்சை அளித்தல் மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி கண்டறிதல், தொடர் சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனைகள் அளித்தல் மற்றும் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களையும், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களையும் பரிசோதித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கொரோனாவைரஸ் தொற்று பரிசோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

அறிகுறி இல்லை என்றால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும், அதேபோல் இந்த வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், பெருநகர சென்னை மாநகராட்சியில் கோட்டத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என நாள்தோறும 200 கோட்டங்களில் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்குட்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தவும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடைபெறும். இம்மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!