நோய்தொற்று எண்ணிக்கை 100க்கு கீழே வரணும்.. அதுவரை ஊரடங்கு இருக்கணும்.. ரவிக்குமார் எம்.பி. அதிரிபுதிரி யோசனை!

By Asianet TamilFirst Published Jun 15, 2020, 9:09 PM IST
Highlights

* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றில் குறைந்தபட்சம் 1 லட்சம் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டும்.
* அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் நோய்த்தொற்று உச்சமடையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதால் குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் வரை இந்தத் தயார்நிலை பராமரிக்கப்பட வேண்டும்.

நோய்த்தொற்று எண்ணிக்கை 100க்கு கீழே குறையாத வரை முழு முடக்கத்தை விலக்கக் கூடாது என்று அரசுக்கு விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தீயாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஓர் உத்தியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 - 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு இன்று அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பையொட்டி அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் 7 அம்சங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* சென்னை மாநகரின் அங்கமாக இருக்கிற திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த பகுதிகளிலும் இதே நடைமுறையைக் கையாள வேண்டும்.
* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றில் குறைந்தபட்சம் 1 லட்சம் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டும்.

* அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் நோய்த்தொற்று உச்சமடையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதால் குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் வரை இந்தத் தயார்நிலை பராமரிக்கப்பட வேண்டும்.
* நோய்த்தொற்று எண்ணிக்கை 100க்கு கீழே குறையாத வரை முழு முடக்கத்தை விலக்கக் கூடாது. படுக்கை வசதிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைத் தற்காலிகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.
* விரைவுப் பரிசோதனைக் கருவிகளை (Rapid Test Kits) தருவித்து இதர மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்” என்று ரவிக்குமார் எம்.பி. அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். 

click me!