
அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது?” என திமுகவின் மாதிரி சட்டசபையை பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலடித்துள்ளார்.
துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காகத் தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் மீண்டும் கூடியது. ஜூலை 9ஆம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று வனத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த திமுகவினர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விவாதிக்க திமுகவினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை அளித்தனர்.
விதி எண் 56இன் கீழ் அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். எனினும், திமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மதியம் 12.30 மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் திமுக பங்கேற்காது”, அதற்க்கு மாறாக இந்த கூட்டத்தொடர் முடியும் வரை மாதிரி சட்டசபை நடத்துவதாக கூறினார்.
சொன்னதைப்போல நேற்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய மாதிரி சட்டப் பேரவை நடத்தினார்கள்
இது குறித்து ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜோரா கைத்தட்டுங்க...1 தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது?” என கலாய்த்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் சுயநல மோதல்கள். ஆளுங்கட்சி சட்டப்பேரவையை கட்சி அலுவலகமாக மாற்றுகிறது. எதிர்க்கட்சியோ அதைத் தடுக்காமல், தங்கள் கட்சி அலுவலகத்தை சட்டப்பேரவையாக மாற்றுகிறது. தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள். எத்தனை இடங்களில் அவர்களுக்காக குரல்கள் ஒலிக்கப் போகின்றன? என மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.