செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையன்.. விரட்டிச் சென்ற வாலிபரிடம் 2 சவரன் சங்கிலியையும் பறித்து அட்டகாசம்..

Published : Feb 18, 2021, 04:48 PM ISTUpdated : Feb 18, 2021, 04:49 PM IST
செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையன்.. விரட்டிச் சென்ற வாலிபரிடம் 2 சவரன் சங்கிலியையும் பறித்து அட்டகாசம்..

சுருக்கம்

சரத்குமார் மற்றும் அவரது நண்பரையும் தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு தன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன்  தங்க செயினை பறித்து சென்றுவிட்டதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.  

சென்னை செம்மஞ்சேரியில் கத்தியை காட்டி  வழிப்பறியில் ஈடுப்பட்ட நபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நண்பருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் கோவலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர்  குமரன் நகர் சந்திப்பில் தேனீர் குடிக்க வாகணத்தை நிறுத்தி உள்ளார். 

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் இவர்களின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து சென்று போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சரத்குமார் மற்றும் அவரது நண்பரையும் தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு தன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன்  தங்க செயினை பறித்து சென்றுவிட்டதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தணிப்படை  அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், கண்ணகிநகர் பகுதியை  சேர்ந்த ஆண்ருஸ்(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் கத்தி, இருசக்கர வாகன முதலியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடன் சேர்ந்து வழிப்பறி ஈடுபட்ட மற்றொரு நபரான இளஞ்சிறாரையும் பிடித்து  குழந்தைகள் நல அலுவலருடன் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். 

 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!