ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் இந்திய ராணுவம் போர் பயிற்சி..

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 4:14 PM IST
Highlights

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போர் உத்திகள் குறித்த பயிற்சிகள் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போர் உத்திகள் குறித்த பயிற்சிகள் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது. தலைசிறந்த ராணுவமாக திகழ்ந்து வரும் இந்திய ராணுவத்தின் போர் யுக்திகளை தெரிந்து கொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

அந்த வகையில் நட்பு நாடுகளை சார்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த 20 பெண்களுக்கு பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் ஜனவரி 18 தொடங்கி ஆறுவார காலம் இந்த பயிற்சியளிக்கப்பட உள்ளது. 

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளுதல், போர்காலத்தில் வீரர்களை அழைத்து செல்லுதல், வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், போர்களத்தில் தொலைதொடர்பு உபகரணங்களை தந்திரமாக தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கு பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  

click me!