இந்தியாவுக்கே வழிகாட்ட.. வரும் 26ம் தேதி ஸ்டாலின் செய்யும் விஷயம்…

Published : Sep 24, 2021, 07:55 AM IST
இந்தியாவுக்கே வழிகாட்ட.. வரும் 26ம் தேதி ஸ்டாலின் செய்யும் விஷயம்…

சுருக்கம்

வரும் 26ம் தேதி தி ரைசிங் சன் என்ற திமுகவின் ஆங்கில நாளேட்டை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடுகிறார்.

சென்னை: வரும் 26ம் தேதி தி ரைசிங் சன் என்ற திமுகவின் ஆங்கில நாளேட்டை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தேசிய அளவில் சிறந்த ஆளுமையாக உருவெடுத்துள்ளது திமுக. தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கும் திமுக, தனது கொள்கைளை தேசிய அளவிலும், வெளிநாட்டில் வாழுபவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது 10 ஆண்டுகள் கழித்து மாநிலத்தில் திமுக அரியணை ஏறி உள்ள நிலையில் தி ரைசின் சன் என்ற ஆங்கில நாளேட்டுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. 1975ம் ஆண்டில் இந்த நாளேடு நிறுத்தப்பட்டு 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

திமுக கொள்கைகள், அறிவிப்புகள், செயல்பாடுகள், மற்ற மாநிலத்தவர், வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள தி ரைசின் சன் என்ற நாளேட்டை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இந்த நாளேடு வரும் 26ம் தேதி மீண்டும் தொடங்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவுக்கே வழிகாட்டும் திமுகவின் கொள்கைகளையும் - செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கும் 'THE RISING SUN' ஆங்கில இதழை செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!