என் கனவில் கூட அப்படி நடக்கும்ன்னு நினைக்கல… ஆனா நடந்துச்சு… எடப்பாடி சொன்ன சீக்ரெட்…

Published : Sep 24, 2021, 07:02 AM IST
என் கனவில் கூட அப்படி நடக்கும்ன்னு நினைக்கல… ஆனா நடந்துச்சு… எடப்பாடி சொன்ன சீக்ரெட்…

சுருக்கம்

நான் கனவில் கூட முதலமைச்சர் ஆவேன் என்று நினைக்கவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை: நான் கனவில் கூட முதலமைச்சர் ஆவேன் என்று நினைக்கவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் நாள் என்று அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அதன் அடுத்த கட்டமாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளன. அதிமுக தமது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது கனவில் கூட நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது. அதிமுகவில் விசுவாசமாக இருந்தால் தொண்டன் கூட முதலமைச்சசராக முடியும். அதிமுக அரசானது விவசாயிகளின் எண்ணங்களை உணர்ந்து அதன்படி செயல்பட்ட அரசு என்று பேசினார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!