வரும் 27ம் தேதி முழு அடைப்பு… அறிவித்தது மாநில அரசு… தயாராகும் அரசியல் கட்சிகள்

Published : Sep 24, 2021, 07:22 AM IST
வரும் 27ம் தேதி முழு அடைப்பு… அறிவித்தது மாநில அரசு… தயாராகும் அரசியல் கட்சிகள்

சுருக்கம்

வரும் 27ம் தேதி முழு  அடைப்பை அறிவித்துள்ளது கேரளாவை ஆளும் இடது சாரி ஜனநாயக முன்னணி.

திருவனந்தபுரம்: வரும் 27ம் தேதி முழு  அடைப்பை அறிவித்துள்ளது கேரளாவை ஆளும் இடது சாரி ஜனநாயக முன்னணி.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இன்னமும் நீர்த்து போகவில்லை. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அவர்களிம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் முழு அடைப்பை டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கேரளாவும் ஆதரித்து உள்ளது. வரும் 27ம் தேதி அவர்கள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதோடு தமது மாநிலத்திலும் முழு அடைப்பை அறிவித்துள்ளது.

இது குறித்து மார்க். கம்யூ. செயலாளர் விஜயராகவன் கூறி உள்ளதாவது: முழு அடைப்புக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் முடிவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27ம் தேதி கேரளாவில் முழு அடைப்பை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வங்கி நிர்வாகங்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர் அமைப்பினர் உள்ளிட்ட 100 அமைப்புகள் கலந்து கொள்கின்றன என்றார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி