
தீபா தொடந்கியுள்ள பேரவையில் தீய சக்திகளின் ஆதிக்கம் தலைத்தோங்குவதாகவும் எனவே பேரவையில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் ஜெ.தீபா கணவர் மாதவன் சரவெடிகளை படபடவென கொளுத்தி போட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 72 நாள் சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த 72 நாட்களும் சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.
ஆளுநரே வந்தால் கூட அப்போலோ மருத்துவமனையின் வளாகத்தில் தான் நிற்க வேண்டிய நிலைமை நிகழ்ந்தது.
இதனால் பொதுமக்களிடையேயும் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்களிடத்தில் பலத்த சந்தேகம் நடமாடி கொண்டிருந்தது.
இதையடுத்து தீபா சசிகலாவுக்கு எதிராக குற்றசாட்டுகளை முன் வைக்க தொடங்கினார்.
இதனால் ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்த அடிமட்ட தொண்டர்கள் தீபாவை அரசியலில் இறக்க முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். அதற்கு தீபா முறையாக பிடி கொடுக்கவில்லை.
ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் பதவியை அடையவும் முயற்சிகள் மேற்கொண்டார்.
இதற்கு பக்க பலமாக இருந்தவர் தீபாவின் கணவர் மாதவன். பேரவையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் தீபா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தீபாவின் கணவர் இன்று மாலை ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போதே ஏதோ ஒரு புது குண்டு வெடிக்க போவதை உணர்ந்து விட்டனர் விவரம் அறிந்தவர்கள்.
எனக்கும் தீபாவுக்கும் முரண்பாடு கிடையாது.
தீபா நடத்துவது பேரவை, நான் கட்சி தொடங்க உள்ளேன்.
ஜெ. தீபா நடத்தும் பேரவையில் தனித்து இயங்க முடியவில்லை.
புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன்.
நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன்.
தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.