
தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து இரட்டை இலைச்சின்னத்தை பெறுவோம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து வெற்றி பெறுவோம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.