
இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக அதிமுகவின் இரு அணியினரையும் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விட, இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சென்றடையும் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்று சசிகலா அணியும், இரட்டை இலையில் எங்களுக்கே உரிமை உள்ளது என்று ஓ.பி.எஸ். அணியும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஷீம் சைதியை நேரில் சந்தித்து பேசியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.