
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடாது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் குறித்த மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
அப்போது தேர்தலை எதிர்கொண்டால் கிடைக்கும் வாக்குவிகிதம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன்பின்னர் பேசிய திருமாவளவன், ஆர்.கே.நகர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடாது என்றார்.
அதே நேரத்தில் தேர்தலைச் சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாகவும், மாறுபட்ட கருத்து நிலவுவதால், நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திருமாளவன் கூறினார். போட்டியிடாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்தும் முடிவு அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.