இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும். அதிமுக- அமமுக இணைப்பு குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 1:02 PM IST
Highlights

அதேபோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்ற வாக்கு சதவீதம், அதேபோல நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் ஆகியவற்றை அதிமுக தலைமையிடம் அமித்ஷா விரிவாக விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.   

இன்னும் ஒரு சில நாட்களில் தாங்கள் என்ன முடிவு எடுத்து இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்துவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல்

அதிமுக-அமமுக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற யுகங்களுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அமமுக -அதிமுக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறையில் இருந்து சசிகலா விடுதலைபெற்று வெளிவந்துள்ள நிலையில், அமமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இணையப்போகிறது என அனைத்து தரப்பிலும்  பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் சேர்வதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்து வந்தாலும்கூட அதிமுக கட்சித் தலைமை அதை ஏற்பதாக தெரியவில்லை. இந்நிலையில்தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதேபோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்ற வாக்கு சதவீதம், அதேபோல நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் ஆகியவற்றை அதிமுக தலைமையிடம் அமித்ஷா விரிவாக விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தனித்து போட்டியின அனுமதித்தால்  அதிமுக வாக்கு வங்கி பிரிய அதிக வாய்ப்புள்ளதால், அதி திமுகவுக்கு சாதகமாக மாறி விடும், அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் வாக்குகள் அதிகம் சிதறும் என  அமித்ஷா அதிமுக எச்சரித்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மிகத்தீவிரமாக தேர்தலை எதிர்கொள்ளும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் அமமுகவும் பொதுக்குழுவை கூட்டி  தற்போது விருப்பமனுவை பெற்று வேட்பாளர்களை அறிவிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதேபோல அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.  ஓரளவுக்கு இரண்டு கட்சிகளுமே இணைவதற்கான  சாத்தியக் கூறுகளையும், வாய்ப்புகளையும்  கடந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனாலும்கூட இரு கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரிலுள்ள சசிகலாவின் இல்லத்திற்கு  அவரை சந்திக்க டிடிவி தினகரன் வருகை தந்துள்ளார். 

அப்போது அதிமுக-அமமுக இணைப்புக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன்,  இதுபோன்ற யூகங்களுக்கு எல்லாம் தன்னால் பதில் கூற முடியாது, தங்களது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் ஒரு சில நாட்களில் மக்களுக்கு தெளிவாக தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.  மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரே இலக்கு தங்களின் எதிரியான திமுகவை வீழ்த்துவதுதான் எனவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். 
 

click me!