திமுக கூட்டணியில் உரசல்.. தலையை தொங்க போட்ட தலைவர்கள்.. வெளியேறுகிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி?

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 1:02 PM IST
Highlights

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம்  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. 

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம்  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று அண்ணா அறிவாலத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் தரப்பில் திமுகவிடம் 12 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், திமுக தரப்பில் கடந்த மக்களவை தேர்தலில் 2 தொகுதியில் ஒதுக்கப்பட்டது. தொகுதிக்கு 3 எம்எல்ஏக்கள் விதம் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.

கடந்த தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை வெறும் 6 இடங்கள் மட்டுமா என்று அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்த பின்பு வழக்கமாக வெளியே வந்து பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவில் நிர்வாகிகள் பேட்டி கொடுக்காமல் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, திமுகவுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம்  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர். 

click me!