#BREAKING சாதித்து காட்டிய தேமுதிக.. வழிக்கு வந்த அதிமுக.. EPS - OPS தரப்பிலிருந்து கிடைத்த கிரீன் சிக்னல்..!

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 12:14 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை  நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை  நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் ஜெயலலிதா இருந்தபோது ஒதுக்கிய 41  தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால், பாமக, பாஜவுடன் பலகட்ட பேச்சு நடத்தினர். பெயரவுக்கு கூட அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘விரைவில் அழைத்து பேசவில்லை என்றால் தனித்து  போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என்றார். இதற்கும் அதிமுக அடிபணியவில்லை. இந்நிலையில், கூட்டணியில்  பாமகவுக்கு 23 தொகுதிகளை  அதிமுக ஒதுக்கியது.

இதனையடுத்து, திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் 2 நாட்களுக்கு முன்சாலிகிராமம்   இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரண்டு  கட்சியினரும் பேசினர். தேமுதிக தரப்பில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். 

அப்போது, பாமகவுக்கு 23  தொகுதிகொடுத்து உள்ளீர்கள். எங்களுக்கு 20 தொகுதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு  வந்தால் 14 தொகுதிகள். இல்லாவிட்டால் 10 தொகுதிகள் என்று கறாராக கூறி விட்டனர். உங்கள் முடிவை விரைவில் சொல்லுங்கள் என சொல்லி  விட்டு திரும்பினர். 

இதனையடுத்து, தேமுதிக மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக தரப்பில் 20 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்தனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷிடம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இதனையடுத்து, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை  நடத்த உள்ளது.

click me!