
மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்ற மத்திய அரசின் புதிய சட்டத்தினால், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ கேரள மாநிலத்தவர்கள்தான்.
காரணம் காலை முதல் இரவு வரை பெரும்பாலானோர் பீப் இல்லாமல் உணவு உண்ணமாட்டார்கள்.மத்திய அரசின் இந்த அதிரடி சட்டத்துக்கு எதிராக தற்போது, கேரள அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.
கேரள அரசின் ஆளும் கட்சியான எல்டிஎஃப் கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்டு வந்தன.
எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கொண்டு வந்த தீர்மானத்தை காஙகிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ஆதரித்து வாக்களித்தனர்.பாரதிய ஜனதா கட்சயின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபால் மட்டும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக இந்திய அளவில் முதல்முறையாக கேரள சேட்டமன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இனி மத்திய அரசுக்கு எதிரான கேரள அரசின் தீர்மானம் செயல்படுத்தப்படுமா, அல்லது மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பன போன்று மாட்டரசியல் விவகாரத்தில் இனி ஸ்வாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது.