
அதிமுக மற்றும் திமுகவை தவிர மற்ற எந்த கட்சிகள் கூட்டணிகள் வந்தாலும் ஏற்றுகொள்வேன் என பா.மக நிறுவனர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்பு போராட்டத்தை ஒழிக்க பாமக சார்பில் தினமும் அறிக்கை வெளிவந்து கொண்டே இருந்தது. இதையடுத்து தமிழக அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள் மதுபானக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றனர். ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் வற்புறுத்தி மதுபான கடைகளை அமைக்க கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து சட்ட போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட செய்ததாக கூறி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உச்சநீதிமன்றம் வரை சென்று நாம் போராடியதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாக குறிபிட்டார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மதுவால் இறப்பதாகவும், பீகாரில் முதலமைச்சர் நிதீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டுவந்துள்ளதகவும், தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தி மூடச்செய்வது வரவேற்கத்தக்கது எனவும், தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள் எனவும் ராம்தாஸ் குறிபிட்டார்.
மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும் என்றும், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி நடத்துவதில் மாற்றம் வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.