’எடப்பாடி கொஞ்சமாவது பயப்படக் காரணம் மு.க.ஸ்டாலின்தான்...’அவர் கேள்வி கேட்கக்கூடாதா? கொதிக்கும் திமுக..!

By Thiraviaraj RMFirst Published Oct 30, 2019, 4:10 PM IST
Highlights

தமிழ்நாட்டையே ஆழ்துளைக்குள் தள்ள நினைக்கும் பாஜகவின் சொல்படி ஆவன செய்யும் எடப்பாடி அரசு ஏதோ கொஞ்சம் அஞ்சுகிறது, தயங்குகிறது என்றால் அது மு.க.ஸ்டாலினால் தான் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி உள்ளது. 
 

திமுக ஆதரவாளர் டான் அசோகன் எழுதியுள்ள ‘ஆட்டுமந்தைகளாகி விடாதீர்கள்’’ என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில், ‘’ மு.க. ஸ்டாலின் என்ன பேசினாலும்  அரசியல் ஆக்குகிறார்  எனச் சொல்ல இங்கே ஒரு அரசியல் அரைகுறை குரூப் இருக்கிறது. சங்கிகளால், தம்பிகளால், அரசியலே மோசம் என சொல்லும் மங்கிகளால் நிறைந்த அந்த குரூப்பிற்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன்.

ஜல்லிக்கட்டு சமயத்தில் எல்லோரும் போராடிக் கொண்டிருந்தார்கள். ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுகவின் அடிமைகளோ தங்கள் ஆர்.எஸ்.எஸ்/பாஜக முதலாளிகள் கோபித்துக் கொள்வார்களோ என்கிற பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஜல்லிக்கட்டு நடத்தணும்னா டெல்லிக்கு போகணும், சுப்ரீம்கோர்ட் போகணும், ஐநா சபை போகணும் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கான தேதி நெருங்கியதில் இருந்தே ஸ்டாலின், "தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அதற்கான சட்டத்தை நிறைவேற்றி ஜல்லிக்கட்டை நடத்தலாம். நமக்கு யாரின் அனுமதியும் தேவை இல்லை. அப்படித்தான் திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டை நடத்தினோம்," என மீண்டும் மீண்டும் சொன்னார்.

போராடியவர்களுக்கோ, அரசியல்வாதிகள் எல்லோரும் மோசம் என ஒருபக்கம் பாடம் எடுக்கப்பட்டதால் அவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. இன்னொருபக்கம் ஸ்டாலின் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத அடிமை அதிமுகவின் ஓ.பி.எஸ் டெல்லிக்கு காவடி எடுத்து தன் மாநிலத்தின் உரிமையை பிச்சையாகக் கேட்டார். அங்கிருந்தவர்களோ சட்ட நிபுணர்களைப் பார்க்கச் சொன்னார்கள். சட்ட நிபுணர்களோ "இதற்கு ஏன் டெல்லி வந்தீர்கள். உங்கள் சட்டமன்றத்திலேயே இதைத் தீர்க்கலாமே" என ஸ்டாலின் சொன்னதையே சொன்னார்கள். உடனே ஓ.பி.எஸ் சென்னை வந்து அதையே செய்தார். இப்படித்தான் நடக்கிறது எப்பொழுதும்.

இப்போதும் 26அடியில் இருந்தபோதே தேசிய பேரிடர் மீட்புக்குழுவை கூப்பிடாத அதிமுகவை ஸ்டாலின் திட்டுகிறார். உடனே நம் பத்ரி போன்ற காவி பாஜக நடுநிலைகள் "அரசியல் ஆக்குகிறார்" என குதிக்கிறார்கள். ஆனால், தேசிய பேரிடர் மீட்பு அதிகாரி ராஜன் பாலுவும், "26அடியில் இருந்தபோது கூப்பிடாமல், எல்லாம் முடிந்ததும் எங்களைக் கூப்பிட்டார்கள்" என சொல்லி இருக்கிறார். இப்போது எங்கே போய் இவர்கள் முகத்தை வைத்துக் கொள்வார்கள்? அதிகாரியும் அரசியல் செய்கிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்கிறார் ஏது சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேட்காமலேயே சில நடுநிலை சங்கிகள் கிளப்பி விடுவதைக் கேட்டு ஆட்டுமந்தைகளாக ஆகாதீர்கள். பாஜகவின் உத்தரவுப்படி தமிழ்நாட்டையே ஆழ்துளைக்குள் தள்ள நினைக்கும் பாஜகவின் சொல்படி ஆவன செய்யும் எடப்பாடி அரசு ஏதோ கொஞ்சம் அஞ்சுகிறது, தயங்குகிறது என்றால் அது எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் கேள்வி கேட்கும் ஸ்டாலின் போன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதனால்தான். அவரை அவரது வேலையைச் செய்ய விடுங்கள் ப்ளீஸ்..’’என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!