குடல் அழற்சியால் அவதிப்படும் ப.சிதம்பரம்... உடனே ஜாமீன் வழங்கக்கோரி கதறல்..!

By vinoth kumarFirst Published Oct 30, 2019, 3:21 PM IST
Highlights

ப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ப.சிதம்பரம் குரோன் எனப்படும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். 

அமலாக்கத்துறை வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நவம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ப.சிதம்பரம் குரோன் எனப்படும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!