சுஜித்துக்கு இதை மட்டும் செய்தால் போதும்... எடப்பாடியார் இந்தியாவுக்கே வழிகாட்டியாகலாம்... முதல்வருக்கே ஐடியா கொடுத்த எம்எல்ஏ..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2019, 3:30 PM IST
Highlights

குழந்தைகளின் பாலியல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவை, கல்வி வாய்ப்பு, உயிர் வாழும் உரிமை ஆகியவை குறித்த விழிப்புணர்வை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

சுஜித் உடல் மீட்கப்பட்ட நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக  அறிவிக்கப்பட வேண்டும் என மஜக பொதுச் செயலாளரும் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான  மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர் தினம், இளைஞர் தினம்,  ,ஆசிரியர் தினம் என விழிப்புணர்வை நோக்கமாக கொண்டு, பல்வேறு தினங்களை அரசு அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

இது போல அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவை உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் குழந்தைகளின்  பாதுகாப்பு , மற்றும்  அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒரு தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக  எழுந்துள்ளது.இந் நிலையில் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்து உயிர் தியாகம் செய்த சோகம் மறையாத நிலையில், அக்குழந்தை மீட்கப்பட்ட  அக்டோபர் 29 தேதியை , குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

click me!