
சசிகலா சிறைக்குச் செல்ல டி.டி.வி.தினரனும், வெங்கடேசும்தான் காரணம் என்றும், சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றும் சசிகலாவின் சகோதரர் விகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தில் அவரது சகோதரிமகன் டி.டி.வி.தினகரன் மற்றும் சகோதரர் திவாகரன் இடையேயான மோதல்வெட்டவெளிச்சமாகியுள்ளது. அம்மா மக்கள்முன்னேற்றக் கழகத்தை ஏற்க முடியாது எனதிவாகரன் கூறியுள்ள நிலையில், கட்சிக்குஎதிராக செயல்படுபவர்கள் உறவினர்கள்என்றால் கூட தூக்கி எறிந்துவிடுவேன் எனடி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார்.
அதிமுக உள்கட்சி பிரச்னையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்த அணிக்கு இரட்டை இலையும், கட்சி பெயரும் கிடைத்த நிலையில் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
அவருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குடும்பத்திற்குமான மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அண்மையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் தனது முகநூல் பதிவில் மாபெரும் தவறுகளை பொறுத்திக்கொண்டிருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு கலைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா அவர்கள் டி.டி.வி.தினகரனையும். வெங்கடேசையும் தனது இரு கண்கள் போல் நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி ஏமாற்றிவிட்டனர் என்றார்.
மேலும் சசிகலா சிறைக்கு செல்ல காரணமே டி.டி.வி.தினகரன்தான் என்றும் குற்றம்சாட்டிய திவாகரன், இன்னும் 6 மாதத்தில் அவர் தனிமரமாக நிற்பார் என்றும் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் அணிகளை இணைத்து சட்சியையும், கொடியையும், சின்னத்தையும் மீட்டுவிட்டனர் என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றும் அம்மா அணிக்கு புது ரத்தம் பாய்யச்சப்படும் என்றும், அந்த அணியை தொடர்ந்து வழி நடத்துவேன் என்றும் திவாகரன் தெரிவித்தார்.