
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதிமுகவில் சீட் ஒதுக்கப்படும் என்பது வதந்தி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்;- வாக்குகள் சிதறாது என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு வாக்குகள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்ற கட்சிகளை பற்றி நாம் பேசுவதில்லை. நாங்கள் மாபெரும் வெற்றியை பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்.
பாண்டவர்கள் ஆகிய நாங்கள் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டம், அதர்மத்தையும். துரோகத்தையும் எதிர்க்கிறோம். 2 நாளில் அமமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதிமுகவில் சீட் ஒதுக்கப்படும் என்பது வதந்தி. டெல்டா மாவட்டத்தில் அமமுக பிரமுகர்களிடம் அதிமுகவை சேர்ந்த முக்கிய நபர் பொய் தகவலை இதுபோன்று பரப்பி வருகிறார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.