திமுகவின் தரம் இவ்வளவு தான்... ஓ.பி.எஸ் கடும் விமர்சனம்..!

Published : Aug 30, 2019, 05:46 PM IST
திமுகவின் தரம் இவ்வளவு தான்... ஓ.பி.எஸ் கடும் விமர்சனம்..!

சுருக்கம்

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 18-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரின் நினைவிடத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக அரசில் அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வரிச்சுமை இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.  

தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுகிறது. வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வரே தெளிவான விளக்கம் அளித்துள்ளார்’’ என அவர் தெரிவித்தார். அதிமுகவில் இருக்கும் போதே தேனியில் தங்க தமிழ்செல்வனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் நிலவி வந்தது. இதனால் தான் தங்க தமிழ்செல்வன் அமமுகவுக்கு ஆதரவு தந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!