’திமுகவின் பி- டீம்... தேசத் துரோகிகளை நிம்மதியாக தூங்க விட மாட்டோம்...’ மாரிதாஸ் சபதம்..!

Published : Aug 30, 2019, 04:19 PM IST
’திமுகவின் பி- டீம்... தேசத் துரோகிகளை நிம்மதியாக தூங்க விட மாட்டோம்...’ மாரிதாஸ் சபதம்..!

சுருக்கம்

பிரிவினைவாதிகள், தேசத் துரோகிகள் எவனும் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது, தூங்க விடமாட்டோம் என மாரிதாஸ் சபதமிட்டுள்ளார்.   

பிரிவினைவாதிகள், தேசத் துரோகிகள் எவனும் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது, தூங்க விடமாட்டோம் என மாரிதாஸ் சபதமிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’திமுக- திகவின்  பி டீமாக இயங்கும் மே -17 இயக்கத்தைத் தூண்டிவிட்டு காவல்துறையிடம் இன்னொரு புகார் கொடுத்துள்ளது திமுக. ஏன் இவ்வளவு அலறல்கள்?

நான் என்ன கேட்டேன்? மார்டீன் டைசன் பற்றிப் பேசச் சொன்னேன். அவ்வளவு தானே. எனக்கு ஒன்று புரியவில்லை. திமுக, மே-17 என்று ஏன் எவருமே டைசன் மார்டீன் பற்றிப் பேச மறுக்கிறார்கள். அதான் நான் சொல்வது பொய் என்று கூறுகிறீர்கள்? அப்போ டைசன் நிறுவனத்தின் விவரங்களை வெளியிடச் சொல்லுங்கள். தமிழகத்தில் லாட்டரி மூலம் பல லட்சம் குடும்பங்களை 90- களில் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்த மார்டீன் குடும்பத்து ஹவாலா பணத்தைப் பற்றிப் பேச ஏன் வாயில் உங்களுக்கு வார்த்தை வருவதில்லை?

மே 17 இயக்கம் - டைசன் உறவு இல்லை என்கிறார்களா? எனவே முதலில் டைசன் நிறுவனத்தின் விவரத்தை வைத்து திருமௌருகன் காந்தியை பேசச் சொல்லுங்கள். நான் மட்டும் அல்ல இன்று தமிழக இளைஞர்கள் அனைவரும் கேட்கிறார்கள் சார்... பதில் சொல்லுங்கள். பதில் சொல்லவே மாட்டீர். ஏன் என்றால் அங்கே தான் திமுக - திக - மே17 அனைத்து கூட்டமும் மாட்டிக்கொள்வீர்.

இன்று நடப்பது உங்கள் பாவம் என் பாவம் அல்ல - 90களில் பல லட்சம் குடும்பங்களைப் போலி லாட்டரி மூலம் நாசம் செய்த ஒரு குடும்பத்தின் சாபம். அந்த குடும்பத்துக் காசில் வாங்கி தின்று உடல் வளர்க்கும் சாபம். அந்த பணத்தை வைத்து போராட்டம் புரட்சி என்று மாணவர்கள் வாழ்வை நசம் செய்யும் சாபம். பிரிவினைவாதிகள், தேசத் துரோகிகள் எவனும் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது, தூங்க விடமாட்டோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி