
ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டார் பன்னீர்செல்வம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் பன்னீர்செல்வம். பின்னர், அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாய் வார்த்தைகள் மூலம் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும் தினந்தோறும் மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
அதன்படி இன்று காலை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போலோவில் ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.
நான் நினைத்திருந்தால் மற்றொரு கூவத்தூரை ஏற்பாடு செய்திருப்பேன்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனதற்கு சில அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என பேசினார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பி.எஸ் கூறியதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது :
அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்தனர்.
உண்மை நிலவரங்கள் தெரிந்திருந்தும் அபாயகரமான தகவலை ஓ.பி.எஸ் பரப்பி வருகிறார்.
அனைத்து சிகிச்சைகள் குறித்தும் நன்றாக அறிந்தவர் ஓ.பி.எஸ்.
விசாரணை என்றால் ஓ.பி.எஸ் தான் முதலில் விசாரிக்கபடுவார்.
ஓ.பி.எஸ்ஸின் கருத்துக்கள் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகும்.
ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு ஓ.பி.எஸ் தரம் தாழ்ந்துவிட்டார்.
ஜெயலலிதா ஆன்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது.
இவ்வாறு கூறினார்.