தமிழகத்தில் மும்முனை தாக்குதல் – தமிழிசை கடும் கண்டனம்

Asianet News Tamil  
Published : Mar 05, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
தமிழகத்தில் மும்முனை தாக்குதல் – தமிழிசை கடும் கண்டனம்

சுருக்கம்

In Tamil Nadu the triangular attack - condemned Tamilisai

பெட்ரோல், டீசல், பால் விலை உயர்வால் தமிழக மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடைபெறுவதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில்,தற்போது பெட்ரோல், டீசலின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்சி அரியலூர் மாவட்ட பாஜக கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்காக திருச்சி வந்த தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களை பாதிக்ககூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி தான் அனுமதி வழங்கி கையெழுத்திட்டது. இப்போது எதிர்கட்சியினர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

மேலும் பால் விலையையும் உயர்த்தியுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக கிடைக்கபடுவதில்லை.

தமிழக அரசு தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியாதாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கூறினார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!