மு.க.ஸ்டாலினை பாராட்டியதால் வந்த சிக்கல்... மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்..!

Published : May 31, 2021, 02:32 PM IST
மு.க.ஸ்டாலினை பாராட்டியதால் வந்த சிக்கல்... மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்..!

சுருக்கம்

 முதல் முதல்வர் இல்லை, ஏற்கனவே உத்தரகாண்ட், ஹரியானா மாநில முதல்வர்கள் போயாச்சு

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்ய நேற்று கோவைக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சென்றவர், கொரோனா வார்டிற்கு உள்ளேயா சென்று ஆய்வு செய்தார். பி.பி.இ கிட் அணிந்து, கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார். மருத்துவர்கள் வேண்டாம் என்று தடுத்தபோது, நோயாளிகளின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே செல்கிறேன் என்றார்.

சிகிச்சை பெறும் தங்கள் உறவுகளை தாங்கள் சந்திக்க முடியாதபோது, நேரில் சந்தித்து நலம் விசாரித்ததால், அக்குடும்பத்தினர் நெகிழ்ந்து போனார்கள். கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று சிகிச்சை பெற்று நோயாளிகளை முதல்வர் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது என்று உதயநிதி குறிப்பிட்டார்.

 

இதையடுத்து எந்த முதல்வரும் செய்யாத காரியம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை சந்தித்த இந்தியாவின் முதல் முதல்வர் என்று சமூக வலைத்தளங்களில் பரவ, அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் மனோபாலா, ’ஹாட்ஸ் ஆஃப்’ என்று ட்வீட் செய்தார்.

மனோபாலாவின் அந்த ட்வீட்டை பார்த்த எம்.காளிதாஸ் என்பவர், ’’யோவ் பழைய நியூஸ் எடுத்து பாருய்யா. முதல் முதல்வர் இல்லை, ஏற்கனவே உத்தரகாண்ட், ஹரியானா மாநில முதல்வர்கள் போயாச்சு’’என்றவர், ‘’ ஜால்ரா ரொம்ப தட்டாதீங்க. சர்ச் பண்ணி பாருங்க மனோ பாலா சார்’’ என்றிருக்கிறார். இதையத்து நடிகர் மனோபாலா, காளிதாஸ் என்பவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?