2 நாட்களில் கொரோனா தடுப்பூசி காலியாகிவிடும்.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

By vinoth kumarFirst Published May 31, 2021, 1:46 PM IST
Highlights

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இரு நாட்களுக்கு தான் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நந்தம்பாக்கத்தில் 864 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 96 லட்சம் டோஸ் கிடைக்கபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்கும் என்றார்.

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையை குறைக்கவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

click me!