மோடி, ஸ்டாலின் இடையே ஸ்டிக்கர் ஒட்டுவதில் போட்டா போட்டி! பாழாகும் மக்கள் வரிப்பணம்! கொதிக்கும் டிடிவி. தினகரன்

By vinoth kumar  |  First Published Jun 5, 2023, 2:59 PM IST

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.


மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!