பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை மீண்டும் உயர்த்தி உள்ளது. பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது.
பால் விலை உயர்வு
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அணைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருப்பது பால் மற்றும் தயிர், இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் சார்பாக ஆரஞ்ச் கலர் பாலின் விலையை உயர்த்தி அறிவித்தது. மேலும் பால் உப பொருட்களின் விலையையும் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல்(20 ஆம் தேதி) உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் ஈடுபட்டு வரும் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! முடங்குகிறது இரட்டை இலை.! அதிர்ச்சியில் இபிஎஸ்.! குஷியில் ஓபிஎஸ்
4 முறை பால் விலை உயர்வு
பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி நாளை (20.01.2023) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்துவதற்கான அறிவிப்பை சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பால் கொள்முதல் விலை உயர்வில்லாமல் கடந்த ஓராண்டு காலமாக அதே நிலையில் நீடித்து வரும் போது கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை பால் விற்பனை விலையை அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்
லிட்டருக்கு ரூ.2 உயர்வு
இதனை தடுக்க வேண்டிய மாநில அரசோ செயலற்ற நிலையில் இருந்து கொண்டு நாங்கள் ஆவினை மட்டுமே நிர்வகிப்போம், கட்டுப்படுத்துவோம் எனக்கூறி தங்களின் பொறுப்பை தட்டிக் கழித்து தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. இந்த நிலையில் 2023 புத்தாண்டு பிறந்து, பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டின் துவக்கத்திலேயே பொதுமக்களுக்கு பால் விற்பனை விலை உயர்வு என்கிற புத்தாண்டு, பொங்கல் பரிசை அளித்துள்ளன.
பால் விலையை அரசே நிர்ணயிக்கனும்
மேற்கண்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை வருகின்ற 20ம் தேதி முதல் லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்தும் முடிவை தன்னிச்சையாக எடுத்து பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. எனவே தனியார் நிறுவனங்களின் பால் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
விலைப்பட்டியல்.
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) பழைய விலை 48.00 - புதிய விலை 50.00
சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய விலை 50.00 - புதிய விலை 52.00
நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) பழைய விலை 62.00 - புதிய விலை 64.00
நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) பழைய விலை 70.00 - புதிய விலை 72.00
தயிர் (TM Curd) பழைய விலை 72.00 - புதிய விலை 74.00
இதையும் படியுங்கள்