ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதியை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அதிகார போட்டி
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக தேர்தல்களில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் இரட்டை தலைமைதான் தோல்விக்கு காரணம் எனக்கூறி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்தும் ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனையடுத்து இரு தரப்பும் தலைமை பதவிக்கு போட்டி போட்டு வருகிறது. இதன் காரணமாக அதிமுக தலைமை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார் எனவே அந்த தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதியான ஈரோடு கிழக்கில் திமுக சார்பாக போட்டியிடுமா.? அல்லது காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம்... ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு கருத்து!!
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக சார்பாக அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவு பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத நிலையே உள்ளது. எனவே இந்த தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறு. அப்படி ஒதுக்கும் பட்சத்தில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் யுவராஜ் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! முடங்குகிறது இரட்டை இலை.! அதிர்ச்சியில் இபிஎஸ்.! குஷியில் ஓபிஎஸ்