
ஜெயலலிதா ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தி கொடுத்த நலதிட்டங்களை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஜெயலலிதா ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தி கொடுத்த நலதிட்டங்களை பட்டியலிட்டார். அவற்றில் சில வருமாறு...
மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 772 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏராளமான கல்லூரிகளை தொடங்கி மாணவர்கள் உயர்கல்வியை படிக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு வழிவகை செய்துள்ளது.
ரூ. 32 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
ரூ. 1650 கோடி மதிப்பீட்டில் காகித நிறுவனம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ரூ. 100 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 70 கோடி மதிப்பீட்டில் நேப்பியார் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு திருச்சி மக்களுக்கு ஜெயலலிதா வாரி வாரி வழங்கியுள்ளாதாக அவர் பேசினார்.