டிரஸ் இல்லாம போனா நாய் கடிக்குமா கடிக்காதா? பதில் அளிக்கிறார் அய்யாகண்ணு...!

 
Published : Oct 26, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
டிரஸ் இல்லாம போனா நாய் கடிக்குமா கடிக்காதா? பதில் அளிக்கிறார் அய்யாகண்ணு...!

சுருக்கம்

aiyakannu answered in different way for a tv

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 100 நாட்களாக பிரதமர் அலுவலகம் முன்பு போராடினர்.

பின்னர் தற்போது  தமிழகம்  வந்துள்ள தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, அவர்கள்  மேற்கொண்ட  போராட்டம் குறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

போராட்டத்தை தீவிர படுத்தும் விதமாக, மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக் கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றைவைத்து  நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதனை தொடர்ந்து  பிரதமர் நரேந்திர மோடி தங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டிய விவசாயிகள், நிர்வாணப் போராட்டமும் நடத்தினர் 

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு ஆடைகளைக் களைந்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லிக் காவல்துறை, அவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது போலிஸ்,பின்னர் அவர்களை விடுதலையும் செய்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய அய்யாகண்ணு தற்போது சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் குறிப்பாக,தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நெறியாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பேசியுள்ளார் அய்யாகண்ணு.

அதில்,ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஐம்பது நாய்களை விட்டு தங்களை விரட்டியதாகவும்,தாங்கள் பல சிரமத்திற்கு ஆளாகியதாகவும் தெரிவித்தார்.

பின்னர், டிரஸ் இல்லாம போனா நாய் கடிக்குமா என்ற நெறியாளரின் கேள்விக்கு..

“அதான் கோவணம் கட்டினோமே என்றும்......தெரிவித்தார்.
பின்னர்,கோவணம் கட்டி ஓடுவது சரியா என்ற கேள்விக்கு....நிர்வாணமாக கூட ஓடுவேன் எனவும்  தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த கருத்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு