மின் கட்டணம் 5 மடங்காக உயரும் அபாயம்...! அதிர்ச்சி தகவல்

 
Published : Jun 22, 2018, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மின் கட்டணம் 5 மடங்காக உயரும் அபாயம்...! அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

The power tariff rises to 5 times?

தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணத்தை 5 மடங்காக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடைசியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் தற்போது வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு அளிக்க ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் 9800 ஆக உயர்த்தப்பட உள்ளது. மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.7475 ஆக உள்ளது. இது ரூ.35,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

கிராமப்புற மும்முனை இணைப்பு கட்ணம் ரூ.18,000 ஆக மாற்றப்பட உள்ளது. இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காசோலைகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் காசோலை திரும்பி வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வசூலிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட உள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகே, மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி